shocked

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

என்னது .?நம்ம பேவரைட் ஹீரோ வீடியோக்கு இவ்ளோ லைக் ஆஹ்?

கோலிவுட் தற்போதெல்லாம் ப்ரோமோஷனை படத்தின் டைட்டில் அறிவிப்பதில் இருந்து தொடங்குகின்றது. அந்த வகையில் டீசர், ட்ரைலர், சிங்கிள் ட்ராக் என அனைத்தும் யு-டியூபில் ஹிட் அடிக்க, படத்தின் ப்ரோமோஷனுக்கு இது வேறு லெவலில் உதவுகின்றது.

எங்கள் ஹீரோஸ் லிஸ்ட் இப்ப பார்க்கலாம்.

“ரஜினிகாந்த்”

ரஜினியை பொறுத்தவரை பலரும் சொல்வது அபர் இன்றைய ட்ரெண்டில் இல்லை என்பது தான், ஆனால், அதை முற்றிலுமாக உடைத்தெறிந்தது கபாலி டீசர், இதை இதுவரை 3.4 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

“கமல்ஹாசன்”

கமல்ஹாசன் என்பவர் எப்போதும் இதுபோன்ற போட்டிகளில் தான் கலந்துக்கொள்ளாதவர், அவர் படத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துபவர் தவிர, இது போன்ற போட்டிகளில் ஈடுபடமாட்டார், அந்த வகையில் தூங்காவனம் ட்ரைலர் 3 மில்லியனை கடந்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் கமலின் ஹிந்தி படமான Ek Duuje Ke Liye பாடல் ஒன்று 27 மில்லியன் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“விஜய்”

விஜய்யை பொறுத்தவரை யு-டியூப் ஹிட்ஸை அதிர வைப்பவர், அவரின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்து கோடியை தாண்டும், இதில் கத்தி படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் 30 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.

“அஜித்”

விஜய் ஒரு ரெக்கார்ட் செய்தால் அதை முறியடிக்க அஜித் ரசிகர்களும் கிளம்பி விடுவார்கள், அப்படி அஜித்தின் ஆலுமா டோலுமா யு-டியூபில் 28 மில்லியனை கடந்ததே இவரின் அதிக ஹிட்ஸ் வீடீயோ.

“தனுஷ்”

என்ன தான் விஜய், அஜித் என்று ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு சண்டை போட்டாலும் யு-டியூப் வீடியோக்களை பொறுத்தவரை என்றும் நிரந்தர முதலிடம் தனுஷ் தான் போல, அவரின் கொலைவெறி பாடல் 10 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

“சிம்பு”

சிம்புவை பொறுத்தவரை தற்போது வரை தள்ளிப்போகாதே பாடல் தான் 28 மில்லியனை கடந்து அவரின் திரைப்பயணத்தில் முதலிடத்தில் இருப்பது.

“விஜய் சேதுபதி”

விஜய் சேதுபதி யை பொறுத்தவரை வருடத்திற்கு 6 படம் நடிப்பதால் டீசர், ட்ரைலர் ஹிட்ஸையெல்லாம் அவர் பார்ப்பதில்லை, இருந்தாலும் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற தங்கமே வீடியோ பாடல் 28 மில்லியனை கடந்தது இவரின் மிகப்பெரும் சாதனை.

“சிவகார்த்திகேயன்”

விஜய், அஜித்திற்கு பிறகு இணையத்தில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் சிவகார்த்திகேயன், இவரின் திரைப்பயணத்தில் யு-டியூபில் அதிகம் ஹிட் அடித்தது ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு வீடியோ பாடல் தான், இதை இதுவரை 3.8 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே
பிரெஞ்சு திரையுலகில் கால் பதித்த நம்ம ...
indian 2
நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
நயன் தாரா - இயக்குனர் அறிவழகன் புதிய ப...
ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
குறள் "388"
மெர்சல் சர்ச்சை விடயத்தில் ரஜினி டுவீட...
செல்வராகவனும் சூர்யாவும் இணையும் அடுத்...
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணி...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •