American Pie Reunion – அடல்ஸ் ஒன்லி – சிரிப்போ சில்லி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஹாலிவூட்/ கோலிவுட்/ ஹாலிவுட்/ ஹொலொவூட் திரைப் பட விமர்சனம்:

கண்டிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்க்க கூடிய படம்!

அமெரிக்கன் பை படத்தின் பாகம் ஒன்று, பாகம் ரெண்டு பார்த்தவங்களுக்கு இப் படத்தின் தலைப்பை பார்த்ததுமே புரிஞ்சிருக்கும். அட ஏலவே வந்த ரெண்டு பாகங்களிலும் அசத்தினவங்களோட மீள் இணைவு தான் இந்தப் படம் என்கிற மேட்டர். சுருங்கச் சொல்லின் காலேஜ்ஜில படித்து கலாட்டா பண்ணிய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின்னர் ஒன்றாகச் சேர்ந்தா என்னா பண்ணுவாங்க என்பதனை காமெடியா சொல்லும் படம் தான் இந்த அமெரிக்கன் பை Reunion ஆகும்.

இணை பிரியாத பசங்களாக காலேஜ் லைப்பில தண்ணி, தம் என இளமையை அனுபவித்துக் கொண்டிருந்தவங்க காலேஜ் முடிஞ்சதும் திசைக்கு ஒன்றாக தத்தம் தொழில் நிமித்தம் பிரிந்திடுறாங்க. இந்த ஐஞ்சு பேரும் மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்து தம் மலரும் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது என்னாகும் என்பதனை இளமைத் ததும்பலுடன் இனிமையான வயசுப் பசங்களுக்குரிய காமெடி கலந்து சொல்லி நிற்கிறது இந்தப் படம்.

படத்தின் இறுதியில் தம்முடன் படித்த அனைத்து ஸ்கூல் நண்பர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மெகா காமெடி திருவிழாவினைப் பண்ணி எம் எல்லோரையும் சிரிக்கப் பண்றாங்கள் படக் குழுவினர். காதல், சோகம், பிரிவு, பாலியல், தனிமை, இளமை மற்றும் முதுமைக்கு இடையிலான பாலியல் குறைபாடுகள், பாலியலில் அக்கறை இல்லாத மனித மன உணர்வுகள், மனிதனுக்கு மனிதன் வேறுபடும் உடலியல் உணர்வுகள் என பலதரப்பட்ட உணர்வுகளையும் கலந்து ஆங்கிலேயர்களின் அன்றாட எண்டர்டெய்மன் (Entertainment) வாழ்க்கையினைப் பேசி நிற்கிறது இப் படம்.

இப் படத்தில் சாமியாக வரும் நம்ம ஊர்க்காரர் வெள்ளை இன மக்களின் களியாட்ட நிகழ்வில் இருந்து வேறுபட்டு எந் நேரம் தனி மனித சந்தோசத்திற்கு நேரம் ஒதுக்காது எப்போதுமே வேலை! வேலை என அலையும் இலங்கை இந்திய மக்களினை அப்படியே கண் முன்னே கொண்டு வருகின்றார். சபாஷ் சாமி! ஏனைய நடிகர்களும் தம் பங்களிப்பினைச் சிறப்புற ஆற்றியிருக்கிறார்கள். பொழுது போக்கு நோக்கில் நாம் அனைவரும் பார்த்து சிரித்து மகிழக் கூடிய சூப்பர் படம்.

ஏப்ரல் 05ம் திகதி 2012ம் ஆண்டு ரிலீஸாகியிருக்கும் இப் படத்தினை யுனிவேர்சல் பிக்ஸர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டிருக்காங்கோ.Jason Biggs, Chris Klein, Seann William Scott, Eddie Kaye Thomas, Eugene Levy ஆகிய காலேஜ் கலாட்டா பசங்களுடன் இன்னும் பல முன்னணி ஹாலிவூட் நட்சத்திரங்கள் நடித்திருக்காங்கோ. படத்தில் ஸ்ரிபன் (Steve) எனும் கதா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் Seann William Scott இன் நடிப்பிற்காக இப் படத்தினை மறுபடியும் மறுபடியும் பார்க்கலாமுங்கோ. ஏன்னா காமெடியில் செமையா வெளுத்து கட்டியிருக்காருங்கோ.

113 நிமிடங்கள் தான் படத்தோட மொத்த டைம்.
வசூலிலும் இப் படம் சக்கை போடு போட்டிருக்கிறது.

படத்தின் ட்ரெயிலரினைப் பார்க்க விரும்புறவங்க இங்கே கிளிக் செய்யுங்க:

இதையும் படிக்கலாமே
கடும் சீற்றத்தில் தங்கர் பச்சான்..
மெர்சல் டீசரின் பின்னணி?
உலக சாதனை படைத்த விவேகம்
மெர்சல் திரைபடதிற்கு தொடரும் சோதனை.அதி...
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B...
தமிழ் இளைஞர்களின் கனவு கன்னிக்கு 24ம் ...
நடிகை நயன்தாராவின் புதிய 5வது காதலன்.....
விஜய் பிடிக்குமா.? அஜித் பிடிக்குமா .?...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
காதலன் விட்டுச் சென்றதால் கதறி அழுத பி...
விஜய் 62ல் பிக் பாஸ் ஜூலி, அஜித் 58 ல்...
விஜய்62 படத்தின் பெயர் இது தான் ..! இண...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •