மனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது.

நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பவள் என்பதால், “மனைவி” என்றும்…

நமது வாழ்வில் கடைசிவரை தொண தொணவென்று துணையாய் வருபவள் என்பதால், “துணைவி” என்றும்…

பொன் நகையை வாங்கி தருமாறு நம்மை ஆட்டி வைப்பதால் , “பொண்டாட்டி” என்றும்…

நம்மை அவ்வப்போது பஞ்சராக்கும் ஜாதி என்பதால், “பொஞ்சாதி” என்றும்…

காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், “ஆத்துக்காரி” என்றும்…

ஷாப்பிங் போய் விட்டு வீட்டுக்கு வந்ததும் நம்மை பார்த்து அவள் கேட்டதை எல்லாம் வாங்கித்தர முடியாத துப்பு கெட்டவன் என்று காரி துப்புவதால், “வீட்டுக்காரி” என்றும்…

கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், “பீபி” (ஹிந்தி) என்றும்…

உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், “பெல்லாம்” (தெலுகு) என்றும்…

நம்மை மதி கெட்டவன் என்று கூறி அடிக்கடி அவள் சிரிப்பதால் “ஸ்ரீமதி” (நேபாளி) என்றும்…

அவ்வப்போது நமது மனதை கார்த்திகை தீபம் போல் சூடாக்குவதால், “மனகார்த்தி” (கன்னடம்) என்றும்…

கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், “கன்டித்தி” (கன்னடம்) என்றும்…

நம்மை திட்டுவதற்கு முன் இங்க பாருய்யா என்று ஆரம்பிப்பதால், ‘”பாரியா” (மலையாளம்) என்றும்…

வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் நம் மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் “Wife” (ஆங்கிலம்) என்றும்…

சும்மா சொல்ல கூடாது நல்லா அனுபவித்து சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
சீத்தாப்பழம்
வெந்தயம்
சில் சில் ஐஸ் கட்டி உங்க அழகை எப்படி ம...
பெண்கள் தூங்கும் விதத்தில் இம்புட்டு ர...
தொப்பையை மிக விரைவாக குறைக்க உதவும் அற...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
பெண்களின் தாம்பத்திய உணர்வு அதிகரிக்கு...
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...
எச்சரிக்கை :- அதிகமாக பகிருங்கள் ஹெட்ப...
தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்....
கோடிகணக்கில் சம்பளம் வாங்கினாலும் உதவா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •