சிவாஜி கனேசன்,ரஜினி,கமல்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நடிகர் திலகத்தின் மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி மற்றும் கமலின் பேச்சு *”அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?”*

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களின் 90வாது பிறந்த தினத்தில் அவரது மணி மண்டப திறப்பு விழா நடைபெறுகிறது. சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் ரஜினி கமல் என ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். 

விழாவில் பேசிய ரஜினி, ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி என்பத மீண்டும் நிரூபணமாகி உள்ளது. காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பாக்கியம் ஓபிஎஸ்.,க்கு கிடைத்துள்ளது. சிவாஜி, நடிப்பு சக்கரவர்த்தி. நடிப்பில் புரட்சியை உண்டாக்கி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களாலும், இவரை போன்று யாராலும் நடிக்க முடியாது என அங்கீகரிக்கப்பட்டவர், சிவாஜி.*”அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?*”

அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்து இருந்தால் கண்டிப்பாக சிலையும், மணிமண்டபமும் அமைத்திருக்க முடியாது. அவர் படைத்த, விதைத்த, சாதித்த கதாபாத்திரங்கள், கடைக்கோடி மக்கள் வரை நடிப்பை கொண்டு சேர்த்தது தான் அவருக்கு மணிமண்டபம் அமைக்கக் காரணம். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போதிலும் ஆன்மீகம் சார்ந்த படங்களில் நடித்து, வெற்றி கண்டவர். செத்த பிறகு மண்ணாகிறவர்களுடன் பழக முடியும். சாம்பலாகிறவர்களுடனும் பழக முடியும். ஆனால் செத்த பிறகு சிலையாகிறவர்களுடன் பழகுவது அபூர்வம். பெருமையான விஷயம்.

அரசியல் – சினிமா இணைந்த விழா இது. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, அரசியல் பாடத்தையும் சொல்லிக் கொடுத்தவர். அவர் தனிக்கட்சி துவக்கி, தனது சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போனவர். அது அவருக்கு கிடைத்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த அவமானம். அரசியலில் வெற்றி பெற சினிமா பேரும், செல்வாக்கும் மட்டும் போதாது.

அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் எனக்கு தெரியாது. அது கமலுக்கு தெரியும். என்னுடன் வா சொல்லித் தருகிறேன் என்கிறார். ஒருவேளை 2 மாதங்களுக்கு முன் கமலிடம் கேட்டிருந்தால் அந்த ரகசியத்தை சொல்லி இருப்பார். சிவாஜிக்கு மணிமண்டபம் அமைத்த ஜெயலலிதா, அவருக்கு சிலை அமைத்த கருணாநிதி ஆகியோருக்கு நன்றி என ரஜினி தனது உரையை முடித்துக்கொண்டார்.

அதே போல் மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாநில, தேசிய, ஆசிய எல்லைகளை கடந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஒருவேளை நான் நடிக்க வராமல் இருந்திருந்தால், என்னை உள்ளே அனுமதிக்கா விட்டாலும் வெளியில் ஒரு ரசிகனாக இருந்து இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பேன். எப்படியும், யார் தடுத்தாலும் இந்த மணிமண்டப திறப்பு விழாவிற்கு நான் வந்திருப்பேன்.

நடிப்பை கற்றுக்கொடுத்து என்னை போன்ற பலரின் வாழ்க்கையை மேம்படுத்திய கலைஞனுக்கு நன்றி செலுத்தும் விழா இது. யாரையும் கட்டாயப்படுத்தியோ, கெஞ்சியோ சிவாஜியை மதிக்க வைக்க முடியாது. எத்தனை முதல்வர்கள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தே ஆக வேண்டும். கோடான கோடி ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கக் கூடிய கலைஞர் சிவாஜி.       நடிக்க முயற்சிப்பவர்களுக்கும், முயற்சித்து தோற்றவர்களுக்கும் அவரே முன்னோடி. அத்தகைய கலைஞனுக்கு மணிமண்டபம் அமைத்து, விழா எடுத்த அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.*”அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?”*

இதையும் படிக்கலாமே
Jeyam Ravi New Movie
Harish Kalyan and Bindhu madhavi Live
கழிவறையில் இருந்து பயந்து ஓடிய ஆன்ட்ரி...
நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் அற...
தெரிந்துகொள்ளுங்கள்: உங்கள் துணையுடன் ...
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திரு...
நடிகை தமன்னாவுக்கு பாலியல் தொல்லை!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தூக்கத்தில் உங்களுக்கு செக்ஸ் கனவுகள் ...
லண்டன் வாழ் ஈழ தமிழ் மக்களுக்கு மாவீரர...
நயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் காதலா...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •