விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

துரு துரு துருவ் .?

தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம்.படத்திற்குப் படம் ஏதாவது மாற்றம் தேவை என்பதால் உடல் எடையும் குறைப்பது, கூட்டுவது  வித்தியாசமான வேடங்கள் என்று வித்தியாசம் காட்டும் விக்கிரமுக்கு நிகர் விக்ரம் தான் .இந்த நிலையில் அவரது ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி. வாரிசு நடிகர்கள் வரிசையில் அடுத்து வருபவர் துருவ்.

விக்ரம் மகனான துருவ்  தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன.

அதற்கேற்றாற் போல் துருவ்வும் அவரது டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாகி வந்தார். இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் விக்ரம் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக விக்ரம் அறிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி’ படத்தை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.துரு துரு துருவிற்கு நாமும் வாழ்த்துகிறோம்.

இதையும் படிக்கலாமே
விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம...
Kajal Aggarwal at Paris Paris Press me...
என்னது? சிவகார்த்திகேயன் இந்த மாதிரியெ...
குழந்தையை கொன்றுவிட்டு நானும் தற்கொலை ...
Mersal - மெர்சல் படம் பார்க்கலாமா? - இ...
மறுபடியும் பொய் சொல்லி மாட்டிய ஜூலி கட...
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் உறுதி...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
இரவில் உறக்கத்தை தொலைத்து தவிப்பவரா நீ...
100 நடிகைகளின் முன் சுய இன்பம் அனுபவித...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •