இதை அரசியலாக்க வேண்டாம் ஏ ஆர் ரஹ்மானின் வேண்டுகோள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இதை அரசியலாக பார்க்க வேண்டாம்  “கரன்சி வாபஸ்” பாடலை வெளியிட்ட இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் .”* அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா*”

 

பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பான கரன்சி வாபஸ் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஏ. ஆர். ரஹ்மான் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பல்வேறு தரப்பிலும் ஏராளமான பாதிப்புகள் உருவாகின. தற்போது கரன்சி வாபஸ் திட்டம் அறிவித்து ஓராண்டு ஆகிறது. இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்றவரும், பிரபல இசை அமைப்பாளருமான ஏ.ஆர். ரஹ்மான் தற்போது பிரதமர் மோடியின் கரன்சி வாபஸ் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பறக்கும் தாமரை என்ற பெயரில் 19 நிமிட பாடலான அதில் கரன்சி வாபஸ் திட்டத்தால் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்ட தாக்கம் குறித்து விவரித்துள்ளார்.  இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாதார நிகழ்வு. தனிப்பட்ட முறையில் கரன்சி வாபஸ் திட்டத்தால் நான் பாதிக்கப்பட்டேன். மோடியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் காணப்பட்டது. எதிர்ப்பும் காணப்பட்டது. இதை கலை ரீதியாக இசையில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். குறிப்பாக பொது மக்களின் மன நிலையில் இருந்து இதை வெளிப்படுத்த விரும்பினேன். 

ஆனால் இதை யாரும் அரசியலாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இதற்கு முன்னோடியாக பாப் பாடகர்களான பாப் மார்லி, ஜான் லென்னான் போன்றவர்கள் இது போன்று சமூக நிகழ்வுகளை இசையில் வெளிப்படுத்தியுள்ளனர். *” அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?*”பீதோவனின் சிம்பொனி இசை கோர்வையில் கூட அரசியல் செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. அவ்வளவு ஏன் சுதந்திர போராட்டம் குறித்து நமது நாட்டில் எழுதப்பட்ட பாடல்களை கூட மக்கள் இன்னமும் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர் என்றார். அண்மையில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து ரஹ்மான் கூறுகையில், இது எனது இந்தியா இல்லை என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல் ஏன் எல்லோரும் தேம்பி தேம...
பிக் பாஸ்ஸில் நுழைந்த அந்த பிரபலம் இவர...
ஆணுக்குள் காமம் எதனால் எந்த இடத்தில் ப...
சவரத் தொழிலாளியை காலணிகளை வாயால் சுத்த...
விராட் கோஹ்லி அனுஷ்கா திருமணம் உறுதியா...
இப்படியும் ஒரு விமான இறங்கு தளம்..!
தல அஜித்தை அவமானப்படுத்திய உலக அழகி?
திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெர...
சினிமாவில் "அதை" நான் அனுபவி...
தமிழில் நடிக்க பயப்படும் பிரபல நடிகை!
கர்ப்பிணி என்றும் பாராமல் இராணுவத்தினர...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •