போட்டியில் வெல்லுங்கள் நடிகையுடன் டேட்டிங் செல்லுங்கள்

என் திரைபடத்தை திரையரங்கு சென்று பார்த்தால் உங்களுடன் டேட்டிங் வருவேன் .ராஷ்மி கெளதம்.   கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், தவ்லத் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மி கவுதம். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் நடித்த போதும் அதிர்ஷ்ட தேவதை இன்னமும் அவர் வீட்டுக் கதவை தட்டவில்லை. தனது ஒரு படமாவது சூப்பர் ஹிட் ஆகிவிட்டால் அது தன்னை உயரத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்று எண்ணியிருக்கிறார். அதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.

“”அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா””ராஷ்மி கவுதம் தெலுங்கில் நடித்துள்ள ‘நெக்ஸ்ட் நுவ்வு’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை யார் ஒருவர் 5 ஆயிரம் முறை பார்க்கிறாரோ அவர் தன்னுடன் டேட்டிங் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். வீடியோவில் ராஷ்மியே பதிவிட்டு வெளியிட்டிருக்கும் இந்த தகவல் இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. 

நடிகையுடன் டேட்டிங் என்றால் சும்மாவா என்ற நப்பாசையுடன் பல ரசிகர்கள் இப்போதே டிக்கெட் காசுக்காக கார்டுகளை தேய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு டிக்கெட் விலை 100 ரூபாய் என்றாலும் 5 ஆயிரம் முறை பார்க்க 5 லட்சம் ரூபாய் தேவைப்படும். அவ்வளவு முறை பார்த்தபிறகு சொன்னபடி நடிகை டேட்டிங் செய்வாரா அல்லது பட பப்ளிசிட்டிக்காக சொன்னேன் என்று அல்வா கொடுத்துவிடுவாரா என்றும் சில ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்

” அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?”

Share Now