சகாயம் ஐ.ஏ.எஸ் பற்றி பலரும் அறியாத 10 தகவல்கள்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஊழல் நிறைந்த இந்த சமுதாயத்திற்கு நடுவில் வெகுசில நல்ல அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியான ஒரு நல்ல அதிகாரியாக வாழ்ந்துகொண்டிருப்பவர் தான் திரு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள். அவரை பற்றி பலரும் அறியாத 10 விடயங்கள் இதோ உங்களுக்காக.

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை எனும் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை – சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐயந்தாவது மகனாக 1964-ம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

2. தான் பிறந்த கிராமத்திலேயே பள்ளி படிப்பை முடித்த இவர் புதுக்கோட்டையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு. சென்னை லயோலா கல்லூரியில் முதுநிலை(சமூகத் தொண்டு) படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னை அப்பேத்கர் கல்லூரியில் சட்ட படிப்பை முடித்த இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக தேர்வானார்.

3. தர்மபுரியில் பயிற்சி ஆட்சியராக தன் பணியை தொடங்கிய இவர் படிப்படியாக உயர்ந்து சயின்ஸ் சிட்டி எனப்படும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

4. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது இவரது தாரக மந்திரம். அதை தன் இருக்கையின் பின்புறத்தில் எழுதிவைத்துள்ள இவர் அதன் படியே நடக்கிறார். அதனாலோ என்னவோ இவருடைய 24 வருட பணிக் காலத்தில் 24 முறை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. 2009 ஆண்டு தன் சொத்துமதிப்பை வெளியிட்டு தமிழகத்தின் எந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் செய்யாத ஒரு வரலாற்று சாதனையை படைத்தார். அதன் படி மதுரையில் 9 லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி வீட்டுக் கடன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு. வங்கியில் 7,712 ரூபாய் சேமிப்பு என்பதே அவருடைய சொத்து மதிப்பு. அவருக்கு அப்போது வயது 47 என்பது குறிப்பிடதக்கது.

6. காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக பண்ணியாற்றிய போது. பெப்சி குளிர்பானத்தில் அழுக்கு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அதனை விசாரித்து அந்த ஆலைக்கு பூட்டு பூட்டிய பெருமை இவரை சாரும்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

7. திரு சகாயம் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த போது, அப்போதைய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், கோ-ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு ஒரு அறை ஒதுக்கி தரும்படி சகாயத்திடம் கேட்டார் . அதற்கு அவர், அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்’ என, பதில் அனுப்பினார். இப்படி யாருக்கும் அஞ்சாமல் தன் பணிக்கும் மக்கள் நலனிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் திரு சகாயம்.

8. திரு சகாயம் நாமக்கல்லில் பணியாற்றிய போது, கிராம நிர்வாக அதிகாரிகள்(V.A.O) தங்களுடைய கிராமத்தில் தங்காமல் தங்களுக்கு வசதியான வேறு ஊர்களின் தங்குவதால் அவர்கள் அந்த கிராம மக்களின் பிரச்சனைகளை உடனே தீர்க்கமுடியவில்லை என்பதை அறிந்து. கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவரும் அவர்கள் பணிசெய்யும் கிராமத்தில் தான் தங்கவேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை அழுத்தம்திருத்தமாகச் சொன்னார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரிகள் சில அரசியல்வாதிகளின் துணையோடு அவரை அந்த ஊரில் இருந்து பணி மாற்றம் செய்யவைத்தனர் . இதனை எதிர்த்து 5000 கிராம மக்கள் ஒன்று திரண்டு அவருடைய ட்ரான்ஸபெர் ஆர்டரை ரத்து செய்யும் படி கோரிக்கை விடுத்தனர். ஒரு நேர்மையான அரசு அதிகாரிக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்து இவளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டது இதுவே முதல் முறை என்றே கூறலாம்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

9. மதுரை கிரானைட் குவாரி பற்றி விசாரிக்கையில் அங்கு நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அவர் அந்த ஊரின் சுடுகாட்டிற்கு சென்றார். அனால் அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு இல்லாததால் அவரால் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை தோண்டி பார்க்க முடியவில்லை. நேரம் கடந்து இருள் சூழ்ந்து விட, இங்கிருந்து சென்று விட்டால் இரவோடு இரவாக பிணங்களை தோண்டி சடலங்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என நினைத்த சகாயமும். அந்த இரவு பொழுது முழுவதையும் சுடுகாட்டிலே கழித்தார். இந்த தகவல் சமூக வலயத்தளங்களில் பரவ. பலரும் சுடுகாட்டிற்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

10. அமாவாசையன்று சுடுகாட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினீர்களே? உங்களுக்கு பயமாக இல்லையா என பலர் அவரிடம் கேட்க. சுடுகாட்டில் பயமில்லை. சுதந்திர தேசத்தில் நடமாடதான் எனக்கு பயம் என கூறினார் திரு சகாயம்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

திரு சகாயம் ஐயாவை பற்றி கூற இன்னும் நிறைய தகவல்கள் உள்ளன. அவைகளை பற்றி வேறொரு பதிவில் பாப்போம்.

இதையும் படிக்கலாமே
கந்தசஷ்டி விரத முறைகள்..!
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
அடுத்த 3 நாட்களுக்கு பின்னி எடுக்கப் ப...
சுனாமியைவிட பெரிய ஆபத்து! கடலுக்குள் ம...
அதிகமாக பகிருங்கள்: ஜீயோவிற்கு எதிராக ...
பெண்கள் சுய இன்பம் காண்பதொன்றும் கொலை ...
தொப்புள் கொடியை வைத்து கோடி கணக்காக பண...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடு...
பிரபல நடிகர் பார்த்தீபன் மகளுக்கு திர...
காதல் மனைவியை ஐ,எஸ் தீவிர வாதிகளுக்கு ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •