பட வாய்ப்புக்காக தமன்னாவா இப்படிச் செய்தார்?

பட வாய்ப்பை அதிகரிக்க நடிகை தமன்னா இப்படி செய்தாரா? “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

தமிழில் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி ஆகியோர் 2 வருடத்திற்கு 1 படம் நடித்து வந்தனர். பின்னர் தற்போது வருடத்திற்கு 2 படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் ஹீரோயின்களால் அப்படி முடிவதில்லை. அதற்காக அவர்கள் வருமானம் பெரிதாக குறைந்துவிடுவதும் இல்லை. ஏனென்றால் சினிமாவை தவிர வேறு வழியிலும் அவர்கள் வருமானம் பார்க்கின்றனர்.நடிகை தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இழந்த வாய்ப்பை மீண்டும் கைப்பற்ற நடிகை தமன்னா தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்திருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்று வந்தார். ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆட ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தார் தமன்னா. ஆனால், தற்போது குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார். கங்கனா ரனாவத் நடித்த இந்தி ‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை தமன்னா நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு மற்ற படங்களை விட குறைவான சம்பளம் பெற்று இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல் சமீபத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

Share Now