வெளியே சொன்னால் வெட்கக் கேடு – விவகாரமான விடயம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஈழத்தில் நிலவிய  யுத்த சூழல் காரணமாக தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்த உறவுகளின் மூலம் ஈழ மக்களிடையே தொற்றிக் கொண்ட வெளிநாட்டு மோகம் இன்றும் நின்றபாடில்லை. ஈழத்தில் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும், தமது பிள்ளைகளை தாம் படும் அதே அவல நிலைக்குள் வளர்க்க விரும்பாத பெற்றோர் பலர் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும், என்ற நிலைக்கு ஆளாகின்றார்கள். அல்லது அம் மக்களைச் சூழ்ந்து வாழும் சமுதாய அமைப்பில் தமது பிள்ளைகள் வெளி நாட்டில் வாழ்கின்றார்கள் என்றால் பெருமை கிடைக்கும் எனும் நியதிக்கு அமைவாக தம் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பினால் தமக்கும் பிள்ளைகள் புலம் பெயர் நாட்டில் உள்ளார்களே; என்று மார் தட்டிக் கொள்ளலாம் எனும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமாஇத்தகைய ஈழ மக்களின் வெளி நாட்டு மோகத்தின் காரணமாக சீதனச் சந்தையில் அடி மாட்டு விலையில் விற்கப்படும் விபரீத நிலையினை பல பெண்கள் பெற்றுக் கொள்வதோடு, கடல் கடந்து தமது கனவுகளைக் கட்டியெழுப்பலாம் எனும் ஆசையில் செல்லும் பல பெண்கள் கனவுகள் சிதைந்து கை விடப்பட்ட பரிதாப நிலைக்கு ஆளாகின்றார்கள். இன்னும் சிலரோ கணவனோடு வாழ்ந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகுவதோடு, தம் ஆசா பாசங்களைப் புதைத்து மனதினுள் வெம்பி அழுகின்றார்கள். ஈழத்தில் முன்பொரு காலத்தில் எஞ்சினியர் மணமகனுக்கு நாற்பது லட்சம் சீதனம் (S40,000 US), மருத்துவருக்கு ஐம்பது லட்சம் சீதனம், எ(அ)க்கவுண்டர் மாப்பிளைக்கு நாற்பது இலட்சம் சீதனம் என இருந்த நிலை மாறித் தற்போது வெளிநாட்டு மாப்பிளைகளுக்கான சீதனம் உயர்ந்த நிலையினைப் பெற்றுக் கொள்கின்றது. 

ஆஸ்திரேலியாவில் வாழும் மாப்பிளை அந்த நாட்டு வதிவிட உரிமையினைப் பெற்றிருந்தால் அவருக்கு ஒரு எமவுண்ட் சீதனமும், அமெரிக்க கிரீன் கார்ட் பெற்றிருந்தால் அவருக்கு ஒரு தொகைச் சீதனமும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழும் மண மகன்களின் வதிவிட உரிமத்தினை அடிப்படையாக கொண்டு ஒரு தொகைச் சீதனமும் கலியாணத் தரகர்களால் நிர்ணயகிக்கப்படுகின்றது. இலங்கையில் வாழும் போது சாதி அடிப்படையில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டு வாழுகின்ற மக்கள், தொழில் அடிப்படையில் பிரிவினைகளைக் கொண்டிருந்தாலும் எல்லாத் தொழிலும் சமம் எனும் திறந்த மனக் கொள்கையினை வெளிநாட்டிற்குச் சென்றதும் பெற்றுக் கொள்வதால் மணமகன் எந்த தொழிலைச் செய்தாலும் கவலையின்றிப் பெற்றோர் தம் மகள் வெளிநாட்டில் வாழ வேண்டும் எனும் ஒரே நோக்கில் பல இலட்சம் பணம் இனாமாக கொடுத்து வெளிநாட்டு வரனுக்கு மண முடித்து வைக்கின்றார்கள்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

வெளிநாட்டில் வாழும் மண மகன்களில் சிலரோ; தாம் திறந்த மனக் கொள்கை உடையோர்களாக நடுத்தர பொருளாதார நிலை உடைய குடும்பங்களில் உள்ள ஏழைப் பெண்களில் அழகிய பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கிக் கொள்ள ஆசை கொள்வார்கள். இன்றைய கால கட்டத்தில் சீதனம் உயர்ந்த நிலையினை அடைந்துள்ள போது, சாதாரண பொருளாதார நிலையில் வாழும் ஒரு குடும்பமானது சீதனமின்றி கல்யாணச் செலவுகளையும் மணமகன் நல் மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது மணமகனைப் பற்றிய போதிய விபரங்களை அறிந்து கொள்ளாது தம் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கின்றார்கள். இங்கே மணமகனின் வயதும் மணமகளின் வயதும் ஒரு பொருட்டாக இவர்கள் கவனிப்பதில்லை. மணமகன் நல் மனதோடு இவ்வாறு தன் இயல்பினை வெளிப்படுத்தும் போது 38 வயதுடைய மண மகனுக்கு 20+ வயதுடைய மண மகனினைத் திருமணம் செய்து கொடுக்கின்றார்கள்.

மணமகன் அழகானவரா? தம் மகளின் அழகிற்கு நிகரானவரா? வயது வேறுபாடு அவர்களின் எதிர்காலத்திற்கு ஒத்து வருமா என்றெல்லாம் இலங்கையில் வாழும் மக்கள் யாருமே சிந்தித்து பார்ப்பதில்லை. தம் மக்கள் வெளி நாட்டில் வாழும் ஒருவரைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்குப் போனாலே போதும் என்ற நிலையிலே வாழுகின்றார்கள். கொஞ்சம் கலர் குறைந்து களையற்றுப் போன 30+++ வயதுடைய மணமகன்களிடம் மாட்டிக் கொள்ளும் 20++ வயதுடைய இளம் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகின்றது. திருமணம் முடித்து சிறிது காலம் அலைபேசியில் தம் காலத்தை மன்னிக்கவும் வாழ்க்கையை நடத்தும் இவர்கள் மணப் பெண் வெளிநாட்டிற்கு வந்ததும் தம் விஸ்பரூபத்தைக் காட்ட முனைகின்றார்கள். இதற்கான பிராதான காரணம் மணகனிடம் காணப்படும் மனப் பயமும், உடல் நிலைக் குறைபாடுமே ஆகும்.

30++ வயதுடைய மண மகனைத் தம் மகளுக்கு கட்டி வைக்க ஆசை கொள்ளும் பெற்றோர் வெளி நாட்டில் தம் சந்ததிக்காகப் பல வருடங்கள் உழைத்த மண மகனுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கின்றதா? தம் இளைய வயதுடைய மண மகளை நன்றாக கவனிப்பாரா இம் மணமகன் என்றெல்லாம் அறியாது பெற்ற கடமைக்கு கலியாணம் முடித்து வைத்தால் சரி என்று அனுப்பி வைக்கின்றார்கள். தன்னை விட அழகான பெண்ணை மண முடித்து கூட்டிச் செல்லும் பெரும்பாலான புலம் பெயர் ஆண்களிடம் காணப்படும் உளவியல் ரீதியான குறைபாடு என்னவென்றால்;தன்னை விட அழகிலும், தோற்றத்திலும் உயர்ந்த பெண் எங்கே தன்னை விட்டுப் போய்விடுவாளோ எனும் அச்ச நிலையாகும். இல்லை தன்னை விட அழகான இப் பெண் அடுத்தவன் அழகினால் கவரப்பட்டு, தன்னை விடத் தொழில் ரீதியில் உயர்ந்திருக்கும் அடுத்த நபரோடு ஓடிவிடுவாளோ எனும் உளவியல் ரிதியான ஐயப்பாடே இந்த நிலைக்கு காரணமாகும்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ஒரு 20+ வயதையுட பெண்ணைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு கூட்டிச் செல்லும் பெரும்பாலான ஆண்கள் தம் மனைவிமாரை வீட்டுச் சிறைக்குள்ளே வாழ வைத்து விட்டு தாம் வேலைக்கு சென்று விடுவார்கள். மனைவியும் ஒரு சராசரி மனித இனம் தானே எனும் இயல்பேதுமின்றி காலையில் வேலைக்குப் போனால், மாலையில் வீடு திரும்பும் இவர்கள் மனைவியை வெளியே கூட்டிச் செல்லும் போதும் இளம் பெண்ணாக இருப்பின் அப் பெண் பிரியப்படும் ஆடைகளை அணியக் கூடாது என்றும் முற்று முழுதாக உடலைப் போர்த்திய ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றார்கள். அல்லது கலாச்சார உடைகளை அணிய வேண்டும் என்கின்ற பாரம்பரிய நிலையினைப் பின்பற்றுகின்றார்கள். இதில் பரிதாபமான விடயம் என்னவென்றால் ஐரோப்பிய வீதிகளில் பல பெண்கள் தலையினை ஸ்ரைற்றினிங் (Hair Straightening) பண்ணிச் செல்ல எம் தமிழ்ப் பெண்களோ ஈழத்தில் வாழ்ந்த அதே சிக்குப்பட்ட பரட்டைத் தலை முடியோடு செல்ல வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

தாம் தம்மைச் சூழ்ந்துள்ளோருக்கு காண்பிப்பதற்காக பெயருக்குப் பொம்மைக் கலியாணம் செய்து விட்டு, மனைவியைப் பற்றிய எந்த விதமான கரிசனையேதுமின்றி வாழும் ஆண்களும் எம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது தான் இன்னுமோர் வேதனையான விடயமாகும்.இத்தகைய வகையறாக்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் செய்கின்ற மிக நல்ல விடயம் “காலம் பூராவும் உன்னைக் கண் கலங்காமல் பார்க்கிறேன்” என்று கூறி விட்டு வீட்டினுள் மனைவியை விட்டு விட்டுத் தாம் வேலைக்குச் சென்று மனைவிக்கும் சேர்த்தே உழைத்து வருவதாகும். ஆனால் மனைவி டீவியைத் தவிர வீட்டில் உள்ள ஏனைய தொடர்பாடற் பொருட்களை உபயோகிக்க கூடாது. கம்பியூட்டர் இருந்தால் அதில் இணையத்தைப் பாவிக்க கூடாது, கணவன் உறவினர்கள் எடுக்கும் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்த்து ஏனைய அழைப்புக்களுக்கு பதில் சொல்லக் கூடாது. வெளிச் செல்லும் (Out going) அலைபேசி அழைப்புக்களை மேற் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு சிறைக் கைதியினைப் போல வாழுகின்ற பெண்கள் பலரும் உள்ளார்கள் என்று அறியும் போது வேதனை தான் எஞ்சுகிறது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

சமீபத்தில் நான் அறிந்த செய்தி 29 வயதுடைய ஆண் ஐரோப்பியக் கண்டத்திலுள்ள ஓர் நாட்டில் வசிப்பவர் 20 வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து கூட்டிச் சென்றிருக்கிறார். பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். இவர்களைப் போன்று பலர் தம் நிலை தெரிந்திருந்தும் ஏன் ஈழத்தில் உள்ள அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது. இதே வேளை புலம் பெயர் நாட்டில் வாழும் சில நல்ல உள்ளங்கள் ஈழத்தில் விவாகாரத்தானவர்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு நல் வாழ்வைக் கொடுத்து வாழ வைத்துமிருக்கின்றார்கள்.

ஒரு பெண் வருடத்தில் 365 நாளும் டீவிப் பெட்டியின் முன் உட்கார்ந்திருப்பதும், கணவனின் உடையினைத் (துணி துவைப்பதும்) துவைப்பதும், வெளி உலகினைத் தரிசிக்காது, வீட்டினுள் விம்மி வெடித்து வாழுவதும் தான் வெளி நாட்டு மோகத்தின் பின்னணியில் சில பெண்கள் பெற்றுக் கொள்ளும் அவல நிலையாகும். அட…இவர்களும் மனித இனம் தானே! இவர்களும் படிக்க வேண்டுமே! அல்லது வெளி உலகில் ஏனைய இன மக்களோடு பழகி வாழ வேண்டும் இவர்கள் என்று எண்ணுவோரின் தொகை சிறிதளவு தான். பெற்றோர்கள் விடும் தவறு ஒரு புறம், தம் நிலையினை மறைத்து உளவியல் ரீதியில் தமக்கு உள்ள அச்சத்தை மறைத்து அப்பாவிப் பெண்களைத் திருமணம் செய்து வீட்டுச் சிறைக்குள் அடைத்து வைக்கும் ஆண்கள் விடும் தவறு மறுபுறம் எனப் பல செயல்கள் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய சிட்டுக்களின் கட்டுக்களை அறுத்துப் போடுகின்றது. பெற்றோர்கள் தம் பிள்ளையின் வளமான எதிர்காலம் பற்றிய தெளிவோடு மணமகனைத் தேடினால் இந்த அவலத்தினை இல்லாதொழிக்கலாம் என்பது யதார்த்தம்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

பிற் சேர்க்கை: இப் பதிவினூடாக வெளிநாட்டில் வாழும் எல்லா ஆண்களையும் நான் குற்றம் சுமத்தவில்லை. பதிவினை முழுமையாகப் படிக்கையில் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான கருப் பொருள் உதவிய ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியாவில் வாழும் நண்பர்கள். அவர்களிற்கு என் உளமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இப் பதிவினூடாகத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நன்றி ; புரட்சி வானொலிக்காக கமலேஷ்

இதையும் படிக்கலாமே
பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள...
ஐந்து சகோதரர்களுக்கு ஒரே மனைவி…. உலக அ...
நடிகை நமீதா காதலனுடன்.இணையத்தை கலக்கும...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
இதை கடைபிடித்தாலே போதுமாம்....தாம்பத்த...
செக்ஸ் காமெடியில் நடிக்க ஆசைப்பட்ட நம்...
இந்த வார்த்தையை இனி இஸ்லாமிய ஆண்கள் சொ...
சேலை கட்டும் போது இதை கவனிக்கிறீர்களா....
தல அஜித்-தின் மகளை வைத்து ரசிகர்கள் செ...
பெண்களுக்கான பாலியல் தொல்லைக்கு முற்ற...
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...
இதுவரை யாரும் செய்யாத முறையில் வித்திய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •