இந்தியாவில் பாசுமதி அரிசி பயிரிட அதிரடி தடை!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பரேலி:சுவை மற்றும் நறுமணத்தால், தனி இடம் பிடித்த, நம் நாட்டின், பாசுமதியை பயிரிட, ம.பி., தமிழகம் உள்ளிட்ட, 22 மாநிலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர், மஹாபாத்ரா கூறியதாவது:
இந்திய பாசுமதி அரிசிக்கு, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தேவை அதிகமாக உள்ளது. 100 நாடுகளுக்கு, பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.சமீபகாலமாக, ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப் பட்டதாலும், இரண்டாம் நிலை விதைகள் விதைக்கப்பட்டதாலும், பாசுமதி அரிசியின் தரம் பாதிக்கப்பட்டது.

அரிசியின் மணம் மற்றும் சுவை குறைந்தது. பாசுமதி அரிசியை கொள்முதல் செய்யும் நாடுகள், அரிசியை ஆய்வு செய்து, மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் விஷமாக மாறியுள்ளதாக கண்டறிந்தன.இதையடுத்து, பாசுமதி பயிரிட்டு வந்த, ஆந்திரா, மேற்கு வங்கம், அசாம், பீஹார், ஒடிசா, கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட, 22 மாநிலங்களில் பாசுமதி பயிரிட, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் தடை விதித்துள்ளது.

உ.பி., உத்தரகண்ட், டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாசுமதி பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால்… குழந்த...
அல்சர் பிரச்சினைக்கு
இலந்தைப்பழம்
மருத்துவப் பயன் நிறைந்த வெற்றிலை
இதை முழுவதும் படியுங்கள். உங்கள் வருங்...
உடலுறவின் பின் என்ன செய்ய வேண்டும் .? ...
உடலுறவுக்கு முன் இதை செய்யுங்கள் தாம்ப...
பறந்து கொண்டிருந்த கட்டார் விமானத்தில்...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...
உலகில் கள்ளத்தொடர்பு அதிகமுள்ள டாப் 7 ...
இரவு முழுவதும் உடலுறவில் ஈடுபடுபவரா நீ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •