பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் இல்லை ஓவியா விசயத்தில் நான் செய்தது தவறு மனம் திறக்கிறார் ஆரவ்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு காசோலை வழங்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும்  போட்டியாளர்களுக்காக மக்கள் 76,76,53,065 வாக்குகள் அளித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவிடம் நடந்து கொண்டது பற்றி மனம் திறந்துள்ளார் ஆரவ்.  ஓவியாவால்தான் அவர் பிக்பாஸ் டைட்டிலை வென்றார் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஓவியாவின் காதலை ஆரவ்  ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்படி நடக்கும் என்று நினைத்துதான் சென்றேன். ஆனால் அப்படி இல்லை. நாங்களே சமைத்து சாப்பிட்டு, நாங்கள் எடுத்து சென்ற உடைகளைதான் உடுத்தினோம். மேலும் சில நேரங்களில் மட்டுமே பிக்பாஸ் உடை தந்தார். பிக்பாஸ் வீட்டில் எங்கள் பொறுமையை சோதித்தார். டாஸ்க்குகள் மிகவும்  கடினமாக இருந்தன. பிக்பாஸ் வீட்டில் இருந்த பலர் வாக்குகளுக்காக போலியாக நடித்தனர். ஆனால் நானும் அப்படி  வாக்குகளுக்காக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.

மக்கள் தன்னை பார்த்து பரிதாபப்பட வேண்டும் என்று சுஜா வருணி நடித்தார். ஓவியா பிரபலமான நடிகை. அதனால் எனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை அவருக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிக்பாஸ் வீட்டில் அவர் செய்த சில விஷயங்களால் அவ்வப்போது நாமினேட் செய்யப்பட்டார்.ஓவியா விஷயத்தில் நான் பொறுமையாக இருந்திருக்கலாம். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களில் நான்தான் அவரின் நல்ல நண்பர். அவரை அவமதித்திருக்க கூடாது. அவ்வாறு செய்தது தவறு என்றும் கூறியுள்ளார் ஆரவ்.

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Mareena Michael Kurisingal New Photos
Rithvika
LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் ...
Arjun Reddy Remake goes to Vikram son ...
இணையத்தில் கசிந்த மெர்சல் திரைப்படத்தி...
என்னை அவமானப்படுத்திய ஓவியா ஆர்மி அலறு...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
காதலிக்காக தலையை மொட்டையடித்துக்கொண்ட ...
விஜய் திரைப்பட ஹீரோயினான பிரபல தமிழ்பட...
வலைதளத்தில் டிரெண்டாகும் பிரபல நடிகரின...
டான்ஸரிடம் காதலை சொன்ன பிரபல தமிழ் நடி...
இத்தாலியில் கோலாகல ஏற்பாடு டிச.15ல் கோ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •