தமிழச்சிகளுக்கு வீரம் பிறந்த இடம் தெரியுமா? உலகின் முதலாவது பெண் தற்கொலை போராளி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares

உலகின் முதல் பெண் தற்கொலை போராளி “குயிலி”

வேலுநாச்சியாருக்கு போர்ப் பயிற்சி அளித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் வெற்றிவேலு. இவர் சிலம்பக் கலையில் கைதேர்ந்தவர். வேலு நாச்சியாரது நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றவர்.  அவரின் பாதுகாவலராகவும் விளங்கினார். ஒரு கட்டத்தில் எதிரிகளால் விலை பேசப்பட்ட வெற்றிவேலு, எதிரிகளுக்கு உளவு வேலை பார்க்கத் தொடங்கினார்.போர்க்களத்தில் இருந்த குயிலி, தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகங்கைக்குச் செல்லத் திட்டமிட்டார் . இதை அறிந்துகொண்ட வெற்றிவேலு, குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று கருதி, ஒரு கடிதத்தைத் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகே வசித்த மல்லாரிராயன்  என்பவரிடம் கொடுக்கச் சொன்னார்.  வெற்றிவேலின் செயல்பாடுகள்மீது ஏற்கெனவே சந்தேகம் கொண்டிருந்த குயிலி அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.  அந்தக் கடிதத்தில் அரசி வேலுநாச்சியாரைக் கொல்வதற்கான திட்டங்கள் விவரிக்கப்பட்டிருந்தது.  உலகின் முதல் தற்கொலைப் போராளி குயிலி :வெகுண்டெழுந்த குயிலி, குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெற்றிவேலின் இருப்பிடம் சென்று அவரைக் கொன்றார். ஒரு கையில் ரத்தம் வடியும் குத்தீட்டியுடனும், மறுகையில் கடிதத்துடனும் அரசியிடம் சென்று  நடந்ததை விவரிக்க,  குயிலியின் வீரத்தை வெகுவாக பாராட்டிய வேலுநாச்சியார் மெய்பாதுகாவளியாக நியமித்தார்

“”உலகின் முதலாவது பெண் போராளி”

1780 – ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 – ம் நாள்  தம் பகுதியான சிவகங்கையை மீட்க, விருப்பாச்சியிலிருந்து படையெடுத்துச் சென்றார் வேலுநாச்சியார். பெண்கள் படைக்குத் தலைமையேற்றார் வீரப்பெண் குயிலி.  சிவகங்கை நோக்கி வரும் வழியில் கோச்சடையில் மல்லாரிராயனையும், அடுத்ததாக திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயனையும், மானாமதுரையில்  மார்டின்ஸ், பிரைட்டன்  போன்ற வெள்ளைக்கார அதிகாரிகளையும், நவாப்பின் படைத்தளபதியான பூரிகானையும் கொன்று குவித்து வெற்றியோடு முன்னேறியது நாச்சியாரின் படை. 

வேலுநாச்சியாரின் கணவரான முத்துவடுகநாதரைக் கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித்தை காளையார்கோயிலில் அடித்து துவம்சம் செய்தார்கள். ஆனால், சிவகங்கைக்குள் நுழைவது மட்டும் கடினமாக இருந்தது. காளையார்கோயிலில் இருந்து சிவகங்கை வரை அடிக்கு ஒரு வீரனை நிறுத்தியிருந்தான் ஆங்கிலத் தளபதி பான்சோர் .
யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் ஊர் நிலவரம் அறிந்து வந்த குயிலி, “நாளை  விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு நடைபெறவிருக்கிறது. பெண்களுக்கு மட்டுமே அனுமதி…நாம் அனைவரும் மாறுவேடத்தில் கோயிலுக்குள் செல்வோம். அங்கிருந்து போரைத் தொடங்குவோம்” என்று யோசனையை முன்வைத்தாள். குயிலியின் யோசனையை அரசியும் ஏற்றுக்கொண்டார். அரசியின் தலைமையில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கோயிலுக்குள் புகுந்தனர். மருதுபாண்டியர்களின் தலைமையில் படைவீரர்கள் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஆயுத பூஜைக்காக வெள்ளையர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலா முற்றத்தில் வைத்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அதைக் கண்டுகொண்டார் குயிலி. 

சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த அரசியும் பெண்கள் கூட்டம் கலையும் நேரம் கையை உயர்த்தி, ‘வெற்றிவேல்! வீரவேல்’ என்று முழங்கினார். மாலைகளுக்குள் இருந்த வாள் வெள்ளையர்களின் தலையை நோக்கிச் சீறிப்பாய்ந்தது. ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி பான்சோர் ‘சார்ஜ்’ என்று கத்தினான். வெள்ளையர்களும் தங்களுடைய ஆயுதக் கிடங்குக்கு ஓடினர். அவர்களுக்கு முன்னே குயிலியும் ஓடினார். அவரது மேனியில் விளக்குக்காகக் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் வழிந்து கொண்டிருந்தது. தீப்பந்தத்தால் தன்மேல் தீயிட்டுக்கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார். ஆயுதங்கள் அனைத்தும் வெடித்துச் சிதறின. தன்னையே மாய்த்துக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்களைத் தீக்கு இரையாக்கினார் குயிலி.  மீதமிருந்த வெள்ளையர்களை, நாச்சியாரின் படைவீரர்கள் துவம்சம் செய்தனர். 

ஊர் எல்லையிலிருந்து  மருது சகோதரர்களும் கோட்டையை நோக்கி முன்னேறியிருந்தனர். இழந்த நிலம் அனைத்தையும் மீட்டாயிற்று. “எங்கே குயிலி?” என்று தேடுகிறார் அரசி. தன்னுயிர் தந்து மண்ணுயிர் மீட்டது குயிலிதான் என்பதை அறிந்து அவரின் வீரத்தையும் தியாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போனார். உலகின் முதல் தற்கொலைப் போராளியானார் வீரப்பெண் குயிலி.

இதையும் படிக்கலாமே
BIGG BOSS FINAL LIVE - Part 1
இதை அரசியலாக்க வேண்டாம் ஏ ஆர் ரஹ்மானின...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இப்படிப்பட்ட ஆண்களா நீங்கள்? உங்களை பெ...
அதிகமாக பகிருங்கள். மகத்துவமும் மருத்த...
கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதம் க...
அதிகமாக பகிருங்கள்:உங்கள் கையில் பழைய ...
நிர்வாண ஆணின் மேல் அமர்ந்து கவர்ச்சி ப...
அவர்கள் உன்னைக் கற்பழித்தார்களா? சே..க...
கணவனின் கண்முன்னே மனைவி-க்கு நடந்த பால...
அம்மாடீயோ....இவ்ளோ அழகா கார்த்திக்கின்...
இது நம்ம தமிழ்நாடு இல்லை,தமிழன் தலை நி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares