கழிவறையில் இருந்து பயந்து ஓடிய ஆன்ட்ரியா பேயை நேரில் பார்த்தாரா

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒருமுறை கழிவறைக்கு சென்றேன். உள்ளே சென்ற நான் பயந்து கத்திக்கொண்டே வெளியே வந்தேன். காரணம், உள்ளே பேய் இருந்ததுதான் என்று சொல்கிறார், நடிகை ஆன்ட்ரியா.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயந்துபோய் காது கிழியும் அளவுக்கு கத்துகிற பெண்கள், பேயைக் கண்டால் பயப்படாமல் இருப்பார்களா? ஆனால், பேய் வேஷம் போட்டவரைப் பார்த்து பயந்துபோய் கத்திய வேடிக்கையான சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது.சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அவள்’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

இவர், இயக்குநர் மணிரத்னத்திடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர். இவரும், சித்தார்த்தும் மணிரத்னத்திடம் ஒரே நாளில் உதவியாளர்களாகச் சேர்ந்தவர்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை சித்தார்த் – மிலிந்த் ராவ் இருவரும் இணைந்தே எழுதியிருக்கின்றனர்.இந்தப் படம், வடஇந்தியாவில் பனி படர்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. “தமிழ் பேய்ப் படங்களைப் போல காமெடியாக இல்லாமல், ஹாலிவுட் படங்களைப் போல ராவான பேய்ப் படமாக இது இருக்கும்” என்கிறார் சித்தார்த்.

இந்தப் படத்தில் சித்தார்த் – ஆன்ட்ரியா இடையே லில் டு லிப் காட்சி இருக்கிறது. இதுகுறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டால், “அதிலென்ன தவறு இருக்கிறது? படத்தில் அதற்கான தேவை இருந்தது. அதனால் நடித்தேன்” என்கிறார்.‘நீங்கள் பேயைப் பார்த்து பயந்திருக்கிறீர்களா?’ என்று ஆன்ட்ரியாவிடம் கேட்டோம். “எனக்கு கடவுளின் ஆசி இருக்கிறது என நினைக்கிறேன். கடவுள் புண்ணியத்தால் எனக்கு அந்த மாதிரி இதுவரை எதுவும் ஏற்படவில்லை.பொதுவாக, நான் பேய்ப் படங்கள் பார்க்க மாட்டேன். பேய் என்றால் எனக்கு அவ்வளவு பயம். அதனால், நான் நடித்த இந்தப் படத்தை நானே பார்க்க மாட்டேன்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒருமுறை பாத்ரூம் சென்றேன். உள்ளே சென்ற நான் பயந்து கத்திக்கொண்டே வெளியே வந்தேன். காரணம், உள்ளே பேய் இருந்ததுதான்.அதற்குப் பிறகுதான் அது பேயாக நடிக்க மேக்கப் போட்டிருந்த ஆர்ட்டிஸ்ட் எனத் தெரியவந்தது” என்று சிரிக்கிறார் ஆன்ட்ரியா. இந்த சிரிப்பு போதுமே ஆன்ட்ரியா… எந்தப் பேயாலும் உங்களை எதுவும் பண்ண முடியாது. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
மதுரவீரன் 'படத்தை வாங்கி வெளியிடும் வி...
வசூலில் விஷாலின் துப்பறிவாளன்
களவு தொழிற்சாலை
Ar Murugadoss - "My first Bilingu...
நயன் தாரா - இயக்குனர் அறிவழகன் புதிய ப...
காதலுக்கு மதம் தடையல்ல நிரூபித்த காதல்...
மறுபடியும் பொய் சொல்லி மாட்டிய ஜூலி கட...
நடிகை நயன்தாராவின் புதிய 5வது காதலன்.....
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
வலைதளத்தில் டிரெண்டாகும் பிரபல நடிகரின...
இத்தாலியில் கோலாகல ஏற்பாடு டிச.15ல் கோ...
பிரபல பாடகியான நடிகை சுட்டுக் கொலை ..!...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •