கடவுள் காவல் துறை அதிகாரியாகவும் வரலாம் நிஜத்தில் ஹீரோ

திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், சாலை விபத்தில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.

விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள். ஆனால் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் என்ன செய்தார் தெரியுமா?

அவர் அங்கு வந்த உடனே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்ன வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம் சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். 

சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய யோசிப்பார்கள் ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது ….
இதில் இருந்து ஒன்று புரிந்தது. மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம். எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் நாம்…. இதற்க்காகவாது பாராட்டலாமே ! நாமும் கொஞ்சம் திருந்தலாமே.!

Share Now