பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவி மகிழும் கொடூர வெறியர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 4.4K
 •  
 •  
 •  
 • 441
 •  
 •  
 •  
 •  
 •  
  4.8K
  Shares

அதிர்ச்சியூட்டும் ஓர் உண்மைச் சம்பவம் – இளகிய மனமுடையோர் படிக்க வேண்டாம். நெஞ்சைப் பிளியும் உண்மைச் சம்பவங்கள் நிறைந்த கட்டுரை. பதிவினைப் படிக்க முன்: இப் பதிவு முற்று முழுதாக உண்மைச் சம்பவங்கள் கலந்த பதிவாகும். இங்கு கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைச் சம்பவங்களும், கசப்பான நிகழ்வுகளையும் மட்டுமே பதிவாக உங்கள் முன் தட்டச்சிடப்பட்டிருக்கிறது.

விவரணம் 1): மனித இனத்தில் பல் வேறு விதமான விசித்திர முகங்கள் உள்ளன. மனிதர்களினை அடித்து துன்புறுத்துவது, மனிதர்களைத் துடிக்கத் துடிக்க கொலை செய்வது இவையெல்லாம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு உடலளவில் தண்டனை கொடுத்தே குற்றங்களை நிறுத்தப்பார்க்கிறார்கள். மனிதனை உடலளவில் கொடுமைப்படுத்துவதனை Brutal Torture என அழைப்பார்கள். மனிதர்களை மனிதர்கள் தங்களின் பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏதுவாக, தம் மன விருப்பத்திற்கு ஏற்றவாறு துன்புறுத்தி மகிழ்கிறார்கள்.

ஒரு சிலர் உடல் உறவிற்கு முன்பதாக பெண்களை துன்புறுத்தி, அவர்கள் வலியில் இன்பம் கண்ட பின்னர் உடலுறவு கொள்வதில் இன்பம் காண்கிறார்கள். இன்னும் சிலர் மனிதர்களை அனைவர் முன்னும் வைத்து தாக்கி அதன் மூலம் இன்பம் காணுகிறார்கள். இன்னும் சிலர் சித்திரவதைக் கூடங்களை உருவாக்கி அங்கே மனிதர்களைத் துன்புறுத்தி இன்பம் காண்கிறார்கள். இனி சம்பவங்களிற்குள் நுழைவோம்.

விவரணம் 2): 1996ம் ஆண்டின் தொடக்க காலப் பகுதி, யாழ்ப்பாணம் முற்று முழுதாக (1995இன் இறுதிப் பகுதிகளில்) இலங்கை இராணுவத்திடம் வீழ்சியுற்ற பின்னர், இராணுவத்தினர் தமது கண்களில் பொதுமக்களிடம் இருந்து புலிகளைப் வேறு பிரித்தறிய வலை வீசித் திரிந்த காலப் பகுதி அது. எந்தவித முன்னறிவித்தல்களுமின்றி சுற்றி வளைப்புக்களும், கைது செய்தல்களும், காணாமல் போகடித்தல்களும் நிகழ்த்தப்பட்ட காலப் பகுதியது.

‘சரசாலை கனகம் புளியடிச் சந்தி( ஐந்து சந்தியடி) யாழ்ப்பாணம் ஊரெழு இறைச்சிக் கடையடி, அச்செழு முகாம், வடமராட்சி வல்லைப் பால பாரிய படை முகாம், புறாப் பொறுக்கி முகாம், நாவற்குழி முகாம்- செம்மணி முகாம் இவையாவும் அக்காலப் பகுதிகளில் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திய முகாம்கள்.

இந்த முகாம்களைக் கடந்து போவதற்கு மக்கள் அஞ்சிப் பயந்து ஓடிய காலப்பகுதி. மக்களிடம் கைத் தொலைபேசிப் பாவனை ஏதும் இருந்திராத காலப் பகுதியது. ஒருவரைக் காணவில்லை என்றால் அவர் பிணமாக கிடைக்கும் வரையோ இல்லை அவர் மீண்டு வரும் வரையோ மக்கள் காத்திருப்புக்களுடன் தங்கள் நாட்களினை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

இறைச்சிக் கடை என்றால் எல்லோருக்கும் தெரியும். இறைச்சி வெட்டுவார்கள். இதனை கசாப்புக் கடை என்றும் சொல்லுவார்கள். தமிழீழத்தின் வடபுலத்தில் உள்ள யாழ் குடா நாட்டில் இறைச்சிக் கடை என்றால் பல்கழைக் கழக மாணவர்கள் முதல், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை பயந்து நடுங்குவார்கள். இறைச்சிக் கடை என்றால் உடனே நினைவிற்கு வருவது, இறைச்சி வெட்டுவது போல பொது மக்களை வெட்டிப் போடும் ஊரெழு முகாம் தான்.

இத்தகைய சித்திரவதைக் கூடாரங்கள் பற்றிய தகவல்களையும், இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதையும் இம் முகாமிற்குச் சென்று மீண்டு வந்தவர்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட தொடரினை உள்ளடக்கிய ‘சரிநிகர்’ பத்திரிகையினை இரண்டாயிரம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையின் அரச படையினர் தடை செய்திருந்தார்கள். பின்னர் இடி என்னும் பத்திரிகையில் பாலியல் பலான விடயங்களோடு இவ் முகாம்கள் பற்றிய விடயங்களையும் எழுதி வந்தார்கள். அதுவும் காலவோட்ட மாற்றத்தினால் காணாமற் போய் விட்டது.

இம் முகாம்கள் பற்றி பலர் பல் வேறு தகவல்களை அறிந்திருந்தாலும் வாய் திறக்காது இருப்பதே உசிதம் என உறைந்து போயிருந்தார்கள். இம் முகாம்களைப் பற்றி வெளியே சொன்னால் உயிர் இருக்காது எனும் அச்சம் மக்கள் மத்தியில் காணப்பட்டது.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் ஆரம்பிக்கப் பட்ட காலப் பகுதி முதல் இன்று வரை இத்தகைய முகாம்களும் சித்திரவதைக் கூடங்களும் காலதி காலமாக இருந்து வந்திருக்கின்றன. நாலம் மாடி, வவுனியா ஜோசேப் முகாம், வவுனியா வேப்பங்குளம் முகாம், கிழக்கிலங்கை வந்தாறுமூலை முகாம், அனுராதபுரம் புதிய நகரச் சிறைச்சாலை உட்பட மன்னார் திருகோணமலையிலும் இவ்வாறான முகாம்கள் இருந்தன.

விவரணம் 3): இம் முகாம்களுக்கு அண்மையாக இராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைத்திருப்பார்கள். (Military Check Point) இங்கே பெண் இராணுவத்தினர் பெண்களை உடற் சோதனை செய்வார்கள், பெண் கொஞ்சம் அழகாக இருந்தால் போதும் அப் பெண்ணை மேலதிக விசாரணை செய்ய வேண்டும் கொஞ்சம் வெயிற் பண்ணச் சொல்லிப் பெண் வீராங்கனை சொல்லுவார். அதன் பின்னர் ஆண்கள் அப் பெண்ணை விசாரணை செய்யத் தொடங்குவார்கள். ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து அப் பெண்ணை வாகனத்தில் ஏற்றி இம் முகாம்களுக்கு கொண்டு செல்வார்கள். முதலில் மேலதிகாரி பெண்ணின் சம்மதம் ஏதுமின்றிப் புணரத் தொடங்குவார். அவரைத் தொடர்ந்து ஏனைய அதிகாரிகள் புணரத் தொடங்குவார்கள். இவ் ஆண் வீரர்கள் செய்யும் இந்தச் செயலைப் பார்த்து ரசித்தபடி பெண் வீராங்கனைகள் அருகே நின்று தட்டிக் கொடுப்பார்கள்.இது புரட்சி வானொலிக்காக சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை.

கைது செய்யப்படும் பெண் ஒரு அப்பாவியாக இருந்தால் புணர்வதும், அதன் பின்னரான தமது செயற்பாடுகள் முடிவடைந்ததும் கொலை செய்து விட்டுப் பாழடைந்த கிணற்றில் வீசி விடுவார்கள். இல்லை என்றால் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியிலோ புதைத்து விடுவார்கள். ’குறிப்பிட்ட ஒரு பெண் இந் நபர்களால் கைது செய்யப்படுவதை, அல்லது இம் முகாமிற்கு அருகில் தான் இவ் நபரைப் பார்த்தேன் என காணாமற் போன குடும்பத்தாரின் உறவினர்களுக்கு யாராவது தகவல் சொல்லி, அவ் உறவினர்கள் போய் அந்த முகாமினுள் கேட்டால்- ’’தாங்கள் யாரையும் அப்படிப் பிடிக்க வில்லை, அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று கூறித் திருப்பி அனுப்பி விடுவார்கள். உறவினர்களின் நிலையோ அனலிடைப் பட்ட மெழுகாகி, தன் மகள், மகன் மீண்டும்- மீண்டு வருவான்/ வருவாள் எனும் காத்திருப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும்.

விவரணம் 4): விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் எனும் அடிப்படையில் யாராவது கைது செய்யப்பட்டால் அவர்களின் நிலமை அவ்வளவு தான். ஆண்கள் என்றால் அவர்களுக்கு கீழ் வரும் வகையில் தண்டனைகள் வழங்கப்படும்.
*தலை கீழாக கட்டி – வௌவால் போன்று தொங்க விடப்பட்ட பின்னர் PVC பைப்பினுள் மண்ணை அடைந்து விட்டு அந்த பைப்பினால் அடித்தல்.
*இரும்பு பைப்பால் அடித்தால்.
*காலின் ஒற்றை விரலில் கயிற்றால் முடிச்சுப் போட்டு கொழுக்கியின் உதவியுடன் தலை கீழாக இழுத்தல்.
*நகங்களை குறட்டினால் இழுத்து மகிழ்தல்
* முட் கம்பிகளால் தாக்குதல்.
*முட் கம்பிகளால் தாக்குதல்

*குண்டி ஓட்டை அல்லது ஆசன வாயினுள் பைப்பினை அல்லது துப்பாக்கிப் பிடியினைச் செருகுதல். மிளகாய்ப் பொடி தூவி ரசித்தல். இதனை ஏனைய சக வீரர்கள் பார்த்து ரசிப்பார்கள்.
*கை நகங்களில் ஊசி ஏற்றுதல்
*உடலில் கூரிய ஆயுதங்களால், ஊசிகளால் குத்துதல்.
*சாப்பாடு கொடுக்காமல் ஏதாவது உண்மைகளை அறியும் வரை வைத்து அடித்தல்.
பெண்கள் என்றால்
*பெண் என்றால் இவர்கள் பார்வையில் எல்லோரும் ஒன்று தான். வயது வேறுபாடின்றி கூட்டமாக புணர்ந்து தள்ளுவார்கள்.

*பெண்களிடம் உண்மைகள் கேட்டுச் சொல்லாது விட்டால் அவர்களின் பெண்ணுறுப்பினுள் மிளகாய்த் தூள் கொட்டுவார்கள். முள்ளுக் கம்பியை பிறப்புறுப்பு, ஆசன வாய் முதலிய இடங்களில் செலுத்துவார்கள்.
*மார்பகம் எல்லாம் கடித்துக் குதறிச் சித்திரவதை செய்வதோடு உண்மைகளைச் சொன்னாலும் சரி சொல்லா விட்டாலும் சரி இறுதியில் மீட்சி இல்லாத உயிர்க் கொலை என்பது தான் இவர்களின் அகராதி.

*இத்தகைய இலங்கை இராணுவத்தின் கொடூர காடையர் படைப் பிரிவிடம் அகப்பட்டால் சொல்லவா வேண்டும்? இவ்வாறு கைது செய்வதன் நோக்கமே கொலை செய்வது தான். ஏன் இவ்வாறு மனித உயிர்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்கிறார்கள் இந்த இரக்கமில்லாத மனிதர்கள்?
கொலை செய்வது தான் ஒரே நோக்கம் என்றால் கைது செய்த உடனே கொலை செய்யலாம் தானே? பிறகு ஏன் இப்படியான துன்புறுத்தல்கள்?

இம் முகாம்களுக்கு அருகில் மக்கள் குடியிருப்புக்கள் இருப்பது அரிதான விடயம். ஆனாலும் வீதியால் செல்வோருக்கும், இரவு நேரங்களிலும் இம் முகாம்களில் இருந்து அழுகுரல்களும், அவலக் குரல்களும் இரவு நேரங்களில் கேட்கும். இத் தண்டனை வழங்கும் நபர்கள் ஒரு சில அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து பெற்றோல் ஊற்றி எரித்து விட்டு வீதியோரத்தில் போடுவார்கள்.சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.

*2006ம் ஆண்டின் பிற் பகுதியில் வவுனியா இறம்பைக் குளம், மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு புதுமாதிரியான முறையினை இந் நபர்கள் கைக் கொண்டார்கள். அதாவது பகலில் அழகான பெண்கள் இருக்கும் இடங்களைப் பார்த்து வைத்து இரவில் வெள்ளை வான் கொண்டு வந்து ஏற்றிக் கொண்டு போய்த் தமது தேவைகள் முடிந்தவுடன் மறு நாள் காலையில் ஒரு சில பெண்களைக் கொண்டு வந்தும் விட்டிருக்கிறார்கள்.

*இவர்களிடம் அகப்பட்டு மீண்டவர்கள் பிற் காலப் பகுதியில் சித்த சுவாதீனமற்ற பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவதும், உடல் அவையங்கள் தொழிற்பட முடியாது செயலிழந்தவர்களாகவும் ஆகிவிடுவார்கள்.

இதனை விட மிக கொடூரமாக 2009ம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் இலங்கையில் இறுதி யுத்தம் முடிந்த பின்னர் இந்த சித்திரவதை – கொடூர வெறி பிடித்த மனிதர்கள் செயற்பட்டார்கள். அந்த விடயங்களை வேறோர் கட்டுரையில் அலசுவோம். புரட்சி வானொலிக்காக கமலேஷ்.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

அரசியலில் குதிக்கும் நயன்தாரா.! இந்த க...
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
இந்திய வரைபடத்தை சிதைத்து இரண்டு மாநில...
பெண்ணை இழுத்துச் சென்று ஆடைகளை கிழித்த...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள்...!
அங்க தான் கள்ள ஓட்டு போட்டோம் ..! ஆர் ...
இந்தியாவில் தமிழ் தாயின் சபதம்..! இவர்...
நான் உங்கள் தீவிர ரசிகன்"ஆனால் என...
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...
விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 4.4K
 •  
 •  
 •  
 • 441
 •  
 •  
 •  
 •  
 •  
  4.8K
  Shares