அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீங்கள் அறிந்திராத மருத்துவ குணங்கள் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்
இது மிகவும் குளிர்ச்சியான பழம். தக்காளியை ஆரம்ப காலத்தில் நஞ்சுக்கனி என்றே விலக்கியிருந்தனர். காலப்போக்கில் அதன் சுவையை உணர்ந்து சுவைத்து உண்டனர். தற்போது அதை சமையலின் பொருளாக மாற்றி, தனிப்பட்ட முறையில் உண்பதை விட்டுவிட்டனர். சாம்பார், ரசம், சட்னி….. என்று உணவில் அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பழத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிட்டாலும் அதன் சத்து குறைவதே இல்லை.இப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம், சாறுபிழிந்தும் பருகலாம். நல்ல பலனைத் தரும்.தக்காளியில் பல வகைகள் உண்டு அவைகள் மாட்டுத்தக்காளி, சீமைத்தக்காளி, மணத்தக்காளி, நாட்டுத் தக்காளி என்று பல வகையான தக்காளிகள் உண்டு.பெரும்பாலும் நாட்டுத் தக்காளியைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். நவீன உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இது உணவுகளுக்கு ருசியையும், நறுமணத்தையும் கொடுக்கிறது.விலையுயர்ந்த கனிகளை வாங்க இயலாதவர்கள், இக்கனியை தினசரி அப்படியே சாப்பிட்டு வந்தாலே போதும் நமது தேகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இப்பழத்தில், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
இதன் மருத்துவப் பயன்கள்
• கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.
• சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.
• தொண்டைப் புண்ணை ஆற்றும்.
• இரத்தத்தை சுத்தமாக்கும்.
• எலும்பை பலமாக்கும்.
• நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்
• தோலை பளபளப்பாக்கும்
• இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
• பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.
• மலச்சிக்கலை நீக்கும்.
• குடற்புண்களை ஆற்றும்.
• களைப்பைப் போக்கும்.
• ஜீரண சக்தியைத் தரும்.
• சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும்.
• தொற்று நோய்களைத் தவிர்க்கும்.
• வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
• கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.
• உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும்.
• நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.
தக்காளியில் உள்ள சத்துக்கள்
• இரும்புச் சத்து – 0.1 மி.கிராம்
• சுண்ணாம்புச் சத்து – 3.0 மி.கிராம்
• வைட்டமின் A – 61 மி.கிராம்
உடல் சோர்வு நீங்க
‘தக்காளி சூப்’ செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.
தோல் நோய் குணமாக
நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
மலச்சிக்கல் நீங்க
காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.
தக்காளி ஜாம்
இது சப்பாத்தி, ரொட்டி, இட்லி, தோசை, பூரி போன்ற சிற்றுண்டிகளுக்கு துணைப் பொருளாகப் பயன்படுத்துவது இன்று பெரும்பாலான இல்லங்களில் நடைபெறுகிறது.இது குழந்தை முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணப்படுவதாகும். தக்காளி ஜாமை கடையில் வாங்கி பயன்படுத்துவதைவிட, நாமே செய்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். தக்காளி கிடைக்காத காலத்திலும், விலை மிக அதிகமாக விற்கும் காலத்திலும் ஜாமை தாராளமாகப் பயன்படுத்தலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்...
நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் மனித மூ...
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
அதிகமாக பகிருங்கள்: உங்களை உற்சாகமூட்ட...
தீபிகா படுகோன் அனுபவித்த கொடிய நோய் .....
ஆபாசமாக பேசி பல பேரை ஏமாற்றிய 3 தில்லா...
கனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞனின் அசத்தல...
நடு ரோட்டில் வைத்து இளைஞனை அடித்த பிரப...
நடிக நடிகைகளுக்கு கோயில் கட்டும் நம்ம ...
இனி உங்கள் குழந்தைகளுக்கு இந்த பெயர் ச...
கனடாவில் குடியேற ஆசைப்பட்டவர்களுக்கு இ...
துடிக்க துடிக்க மகனை வெட்டிக்கொலை செய்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares