ஈழத்தமிழரின் திரைப்பட முயற்சிகள் தொடர்ந்தும் ஒரு உத்வேகத்தில் நடந்து கொண்டிருக்க, இலண்டனில் இருந்து திரைப்பட துறையில் சாதனை படைக்க அடுத்த திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஏதிலிகள் என்ற குறும்படம் மூலம் அனைவராலும் அறியப்பட்ட திரு பிரேம் கதிர் அவர்கள் குறித்த திரைப்படத்தை தற்போது எடுத்து வருகிறார். அவர் இந்தத் திரைப்படத்திற்கு வைத்திருக்கும் தலைப்பு “சுழியம்”.
ஏற்கனவே படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது குறித்த திரைப்படம்.
திரைப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் அரங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.