துறு துறு விழிகளுடன் சுட்டிப் பெண்ணாய் தமிழ் சினிமாவை வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவரது நடிப்பு சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பப்பட்டது. ரஜினி, கமல்,அஜித்,விஜய், சூர்யா, என அனைத்து முன்னணி நாயகர்களுடனும் ஒரு ரவுண்ட் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
அதன் பின் சில காலம் சினிமாவை விட்டு விலகி குழந்தைகள் குடும்பம் என்று இருந்தார். மீண்டும் சினிமாவிற்கு வந்த ஜோ 36 வயதினிலே திரைப்படத்தில் நான் இன்னும் அப்படியே தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்தார். தொடர்ந்து மகளிர் மட்டும் திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது காற்றின் மொழி திரையில் நடித்து முடித்திருகின்றார் ஜோதிகா. திரைப்படதிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு திரைப்படத்தின் ஒப்பிஸ் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இதோ உங்களுக்காக..!ஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..!